கோவிட்-19 பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் தளர்வளிக்கப்பட்டதை அடுத்து யுனெஸ்கோ உலக பாரம்பரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிம்லா - கல்கா ரயில் பாதையில் இன்று இந்தச் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக இயக்கப்படாமல் இருந்த கே.சி. -520 நீராவி லோகோ மோட்டிவ் என்ஜின் அதன் இரண்டு ஓட்டுநர்களுடன் இன்று காலை 11:05 மணி அளவில் தனது பயணத்தை சிம்லாவிலிருந்து மீண்டும் தொடங்கியது.
கைதாலிகாட் ரயில் நிலையத்தைச் சென்றடைந்த அது பின்னர் மாலை 4:30 மணியளவில், சிம்லா ரயில் நிலையத்திற்குத் திரும்பியது.
1905ஆம் ஆண்டில் வட பிரிட்டிஷ் லோகோமோட்டிவ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட பாரம்பரிய இயந்திரம் கே.சி. -520 எஞ்சின் 1971ஆம் ஆண்டில் சேவையிலிருந்து வெளியேற்றப்பட்டது.