ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவியான ஷீலா ரஷீத் மீது அவரது தந்தை அப்துல் ரஷீத் ஷோரா காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். ஜம்மு - காஷ்மீர் காவல்துறை இயக்குநரிடம் அவர் அளித்த எழுத்துப்பூர்வமான புகாரில், தன்னைக் கொலை செய்துவிடுவேன் என ஷீலா ரஷீத் மிரட்டியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அப்துல், "என்னைக் கொலை செய்துவிடுவேன் என ஷீலா ரஷீத் மிரட்டிவருகிறார். என்னுடைய மூத்த மகள், மனைவி, பாதுகாவலர் சகீப் அகமது ஆகியோர் அவருக்கு ஆதரவாக உள்ளனர். 2017ஆம் ஆண்டு, ஷீலா அரசியலில் ஈடுபடத் தொடங்கிய பின், எனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. எனவே, உயிருக்கு பயந்து ஜம்முவுக்குச் சென்றேன்.