ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மக்கள் இயக்கத்தின் தலைவர் ஷீலா ரஷித் நேற்று முன்தினம் தனது ட்விட்டர் பக்கத்தில் சில பதிவுகளைப் பதிவிட்டிருந்தார். அதில் பாதுகாப்புத் துறை, மத்திய அரசுக்கு எதிராக தனது கருத்தை பதிவிட்டிருந்தார். இந்திய பாதுகாப்புப் படை காஷ்மீர் மக்களை கொடுமைப்படுத்துவதாகவும், உள்ளூர் செய்தியாளர்களை அனுமதிக்க மறுப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
'மாணவியை கைது செய்க!' - மத்திய அரசு வலியுறுத்தல்
டெல்லி: ஆராய்ச்சி மாணவி ஷீலா ரஷித் இந்திய பாதுகாப்புப் படைக்கு எதிராக ஆதாரமற்ற அவதூறு கருத்துகளை பரப்பிவருவதாக வழக்குரைஞர் அலாக் அலோக் ஸ்ரீவஸ்தவா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் இரவு நேரங்களில் பாதுகாப்புப் படையினர் வீடு புகுந்து மக்களின் உடமைகளை சேதப்படுத்தி அவர்களை துன்புறுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். அவரது குற்றச்சாட்டை பாதுகாப்புத் துறை அமைச்சகம் முற்றிலும் மறுத்துள்ளது.
இந்நிலையில், வழக்கறிஞர் அலாக் அலோக், உச்ச நீதிமன்றத்தில் ஷீலா ரஷித் மீது குற்றவியல் புகார் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், "மக்கள் மத்தியில் காஷ்மீர் குறித்து ஷீலா பொய்யான தகவல்களை பரப்பிவருகிறார். அவர் கூறும் அனைத்தும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள். நாட்டின் பாதுகாப்புப் படை, மத்திய அரசு குறித்து அவதூறு கருத்துகளை கூறிவருகிறார். ஆகையால், ஷீலாவை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.