மத்திய அரசால் அண்மையில் கொண்டுவரப்பட்ட வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் கடும் எதிர்ப்பலை வீசிவருகிறது. இந்தச் சட்டங்களுக்கு திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சிரோமணி அகாலி தளக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. விவசாயிகளை வஞ்சிக்கும் சட்டம் என்றும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக உள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் இதுகுறித்து விமர்சித்துவருகின்றன.
டெல்லியில் ஆறாவது நாளாக இன்றும் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். விவசாயிகளின் தொடர் பேராட்டத்தை மத்திய அரசு அலட்சியப்படுத்திவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், மத்திய அரசு ஆணவப்போக்கை கைவிட்டு வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என ராகுல் காந்தி கோரிக்கைவிடுத்துள்ளார்.