கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் தொகுதியிலிருந்து காங்கிரஸ் சார்பில் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சஷி தரூர். காங்கிரஸ் கட்சியின் முன்னணி முகங்களில் ஒருவராகத் திகழும் இவர், ஆங்கிலத் திறனுக்குப் பெயர் போனவர். ஆங்கில மொழியில் அனைவரையும் ஈர்க்கும் விதத்தில் சரளமாகப் பேசும் திறனைப் பிரதமர் மோடி உட்பட அனைவரும் பாராட்டியுள்ளனர். அத்துடன் புதிய ஆங்கிலச் சொற்களை அவ்வப்போது அறிமுகம் செய்து பிறரை வியப்பில் ஆழ்த்துவது இவரின் ஸ்டைல்.
ஷேக்ஸ்பியரான சஷி தரூர்! - ட்விட்டர்
டெல்லி: காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சஷி தரூரை பிரபல ஆங்கில எழுத்தாளர் ஷேக்ஸ்பியர் போல மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.
இந்நிலையில், சஷி தரூரை வியப்பில் ஆழ்த்தும் வகையிலான சுவாரஸ்ய சம்பவம் இன்று நிகழ்ந்துள்ளது. இவரின் ஆங்கிலப் புலமையை சுட்டிக்காட்டும் நோக்கில் சஷி தரூரின் முகத்தை ஷேக்ஸ்பியர் போல் மார்ஃப்(உருமாற்றம்) செய்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தைப் பார்த்த சஷி தரூர் இந்த சம்பவத்தைக் குறித்து ட்வீட் செய்துள்ளார். தன்னை ஷேக்ஸ்பியராக சித்தரித்துள்ள புகைப்படத்தை உருவாக்கியவருக்கு நன்றி எனவும், இருப்பினும் இந்த பெருமைக்கு நான் தகுதியற்றவன் எனவும் பெருந்தன்மையாக்க ட்வீட் செய்துள்ளார் தரூர்.