பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றார். இப்பயணத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை சந்தித்தார். அப்போது காஷ்மீர் விவகாரத்தில் தன்னை மத்தியஸ்தம் செய்துவைக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதாக ட்ரம்ப் கூறினார். உடனடியாக இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார் பிரதமர் மோடி அவ்வாறு எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என்று விளக்கமளித்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் முக்கிய தலைவரும் திருவனந்தபுரம் எம்பியுமான சசி தரூர் கூறுகையில், "டிரம்ப் என்ன சொல்கிறார் என்று அவருக்கே தெரியவில்லை. காஷ்மீர் பிரச்னை குறித்து யாரும் அவருக்கு விளக்கவில்லை போலும். காஷ்மீர் விவகாரத்தைப் பொறுத்தவரை இந்தியாவின் கொள்கை மிகத்தெளிவானது.