தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கொரோனா கவிதை எழுதிய சசி தரூர் - சசி தரூர் கொரோனா கவிதை

டெல்லி: கொரோனா வைரஸ் குறித்து காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசி தரூர் ட்விட்டரில் எழுதியுள்ள நகைச்சுவை கவிதை தற்போது வைரலாகி வருகிறது.

Sashi
Sashi

By

Published : Mar 14, 2020, 4:07 PM IST

கொரோனா வைரஸ் பாதிப்பு உலகையே உலுக்கி வரும் நிலையில், சமூக வலைதளவாசிகளோ அதையும் ஜாலியாகவே அணுகுகின்றனர். மீம்ஸ், டிக்டாக் வீடியோக்கள், கலாய் பதிவுகள் என நெட்டிசன்கள் தங்கள் கற்பனைத் திறமையை கொரோனாவைக் கொண்டும் காட்டிவருகின்றனர்.

இந்த நெட்டிசன்களுக்கு சற்றும் சளைத்தவன் இல்லை நான் என்பது போல காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசி தரூர் கொரோனா வைரஸ் குறித்து நகைச்சுவையாக கவிதை ஒன்றை தற்போது எழுதியுள்ளார்.

மழலையர் பாடல் போல் எட்டு வரிக் கவிதை ஒன்றை ஹிந்தி மொழியில் எழுதி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் சசி தரூர். அக்கவிதையை, ”யாரோ தவறுதலாக உப்பு சாப்பிடதற்கு, யாரோ தண்ணீர் குடிக்க வேண்டியுள்ளது. அனைவரும் நோயிலிருந்து தப்பிக்க பல வழிகளைக் கூறுகிறார்கள் கடவுளே. இந்த அரக்கனை விரட்ட எனக்குத் தெரிந்த ஒரே வழி கையைச் சுத்தமாகக் கழுவுவது மட்டுமே” என்ற பொருளில் எழுதியுள்ளார் சசி தரூர்.

சசி தரூர் கவிதை

மக்கள் சுகாதாரமாக இருக்கும்படியும், கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார் சசி தரூர்.

இதையும் படிங்க: இனிமை நிறைந்த உலகம் இருக்கு கொரோனா பற்றி கவலை எதற்கு...

ABOUT THE AUTHOR

...view details