தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாக். பிரதமர் இம்ரான் கானை பாராட்டிய சசி தரூர்! - Imran Khan

டெல்லி: திப்பு சுல்தானை பற்றிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கருத்து வரவேற்கத்தக்கது என, காங்கிரஸ் மூத்தத் தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.

சசி தரூர்

By

Published : May 7, 2019, 10:03 AM IST

இது தொடர்பாக காங்கிரஸ் மூத்தத் தலைவர் சசி தரூர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு இந்திய வரலாற்றின் மீதுள்ள ஈடுபாடு வரவேற்கத்தக்கது. ஆனால் திப்பு சுல்தானை, அவரது நினைவு தினத்தன்று நினைவு கூறுவது வருத்தம் அளிக்கிறது" என பதிவிட்டுள்ளார்.

சசி தரூர் ட்வீட்

மைசூரின் புலி என்று அழைக்கப்படும் திப்பு சுல்தானின் நினைவு தினத்தையொட்டி, கடந்த 4ஆம் தேதி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், "என்னை மிகவும் கவர்ந்த மன்னர்களில் ஒருவர் திப்பு சுல்தான். சுதந்திரத்துக்காக போராடி உயிர்நீத்தவர் அவர்", என குறிப்பிட்டிருந்தார்.

ABOUT THE AUTHOR

...view details