குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்துவருகின்றன. இதற்கிடையே டெல்லியில் உள்ள ஜாமியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் டிசம்பர் 13ஆம் தேதியன்று குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஏதிராக போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தின்போது, போராட்ட ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவனான ஷர்ஜீல் இமாம் என்பவர் தேசத்திற்கு விரோதமாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர், "5 லட்சம் மக்கள் ஒருங்கிணைக்கப்பட்டால், நாம் இந்தியாவிலிருந்து வடகிழக்கு மாநிலங்களை நிரந்தரமாக பிரித்துவிடலாம். அப்படி நடக்காவிட்டாலும் குறைந்தது ஒன்றரை மாதங்களாவது பிரித்துவிடலாம். சாலைகளையும் தண்டவாளங்களையும் உடைத்து நொறுக்குவோம். அப்போதுதான் நம்முடைய பேச்சை இவர்கள் கேட்பார்கள்" என்று பேசியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகிவருகிறது.