தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'உற்பத்தி செலவை குறைக்கவில்லை எனில் அழிவு ஏற்படும்..!' - சரத் பவார் எச்சரிக்கை - சரத் பவர்

மும்பை: "சர்க்கரை உற்பத்திக்காக சில தொழிற்சாலைகள் அதிகளவில் செலவு செய்கின்றன. தொழிற்சாலைகளின் வளர்ச்சியை மேம்படுத்த உற்பத்தி செலவைக் குறைக்க வழி வகைச் செய்ய வேண்டும். இல்லையென்றால் தொழிற்சாலைகள் அழிவுக் கட்டத்தை நோக்கி நகரும் " என்று, காங்கிரஸ் மூத்த தலைவர் சரத் பவார் எச்சரித்துள்ளார்.

சரத் பவர்

By

Published : Jul 7, 2019, 7:10 PM IST

2020 சர்க்கரை மாநாட்டில் பேசிய அவர், "மஹாராஷ்டிராவில் மிக முக்கிய தொழிற்சாலையில் சர்க்கரை உற்பத்தி உள்ளதால் சுமார் 5.5 கோடி விவசாயிகள் இதில் ஈடுபட்டுள்ளனர். ஒரு காலத்தில் சர்க்கரை உற்பத்தியில் முன்னிலையிலிருந்த பிரேசிலை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடத்தில் உள்ளது. சர்க்கரை நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பதில்லை என்பதால் கொள்முதலும் குறைவாக உள்ளது. மத்திய அரசு புதிய திட்டங்கள் கொண்டு வந்து இதனைச் சரி செய்ய வேண்டும்", என வலியுறுத்தியுள்ளார்.

மேலும் பேசிய சரத் பவர், வாடிக்கையாளர்களையும் ஏற்றுமதி செய்ய ஆகும் போக்குவரத்து செலவையும் கணக்கில் கொண்டு எதிர்காலத்தில் எத்தனாலை சேர்த்து சர்க்கரை உற்பத்தி செய்ய முன்னேற்பாடுகளைத் தொடங்க வேண்டும். ஒருவேளை அந்த திட்டம் வெற்றியடைந்தால் சர்க்கரை உற்பத்தி செய்ய அவசியமிருக்காது. அதற்கு மாற்றாக எத்தனாலை உற்பத்தி செய்தால் அரசுக்கும் தொழிற்சாலைகளுக்கும் நல்ல வருமானம் கிடைக்கும்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details