டெல்லி வன்முறைப் போராட்டத்தின்போது சிவப்பு நிற டி-சர்ட் அணிந்திருந்த இளைஞர் ஒருவர், கல்லெறியும் வன்முறையாளர்களுடன் இணைந்துகொண்டு துப்பாக்கியால் சுடுவது போன்ற புகைப்படங்கள் வெளியாகின.
மேலும் அவர் காவலர்களை நோக்கியும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டினார். இவரைக் காவலர்கள் தேடிவந்தனர். இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் பதுங்கியிருந்தபோது டெல்லி குற்றப்பிரிவுக் காவலர்களால் கைதுசெய்யப்பட்டார்.
இது குறித்து காவல் கூடுதல் ஆணையர் அஜித் குமார் சிங்கலா கூறுகையில், “ஷாரூக் கையில் வைத்திருந்த துப்பாக்கியை மீட்க முயற்சிக்கிறோம். ஷாரூக் எந்த குற்றப் பின்னணியும் கொண்டவர் அல்ல. அவரின் தந்தை மீது போதைப்பொருள், போலி நாணய வழக்குகள் உள்ளன.
தற்போது அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 307 (கொலை முயற்சி), 186 (அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல்) மற்றும் ஆயுதச் சட்டப் பிரிவு 353இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரின் காவலை நீட்டிக்க முயற்சிக்கிறோம்” என்றார்.