தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

போராட்டம் தொடரும் - ஷாஹீன் பாக் போராட்டக்காரர்கள்! - குடியுரிமைத் திருத்தச் சட்டம்

டெல்லி: மத்திய அரசு சி.ஏ.ஏ. சட்டத்தை திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடரும் என ஷாஹீன் பாக் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் தெரிவித்துள்ளனர்.

shaheen-bagh-will-not-be-vacated-in-view-of-coronavirus-protesters
shaheen-bagh-will-not-be-vacated-in-view-of-coronavirus-protesters

By

Published : Mar 19, 2020, 12:06 PM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து மூன்று மாதங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்துவருகின்றன. அதில் டெல்லியின் ஷாஹீன் பாக் பகுதியில் பொதுமக்கள் பலரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

ஷாஹீன் பாக் போராட்டம்

இதனிடையே இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்குதல் பொதுமக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்காகப் பொது இடங்களில் மக்கள் கூட வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதனால் டெல்லி ஷாஹீன் பாக் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போராட்டத்தினரை கலைந்துபோகுமாறு அரசு நிர்வாகம் சார்பாக கோரப்பட்டது. ஆனால் போராட்டம் இன்னும் தொடர்ந்துவருகிறது.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் பேசுகையில், ''மத்திய சி.ஏ.ஏ. சட்டத்தைத் திரும்பப்பெறும்வரைப் போராட்டம் தொடரும். கரோனா வைரசால் உயிரிழந்தாலும், நாங்கள் இந்த இடத்தைவிட்டு நகரமாட்டோம்'' என்றார்.

ஷாஹீன் பாக் போராட்டக்காரர்கள்

இந்தியாவில் கரோனா வைரசிற்கு 169 பேர் பாதிக்கப்பட்டும், மூன்று பேர் உயிரிழந்தும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'டெல்லி கலவரம் குறித்து நியாயமான விசாரணை வேண்டும்' - ஷாஹீன் பாக் போராட்டக்காரர்கள்

ABOUT THE AUTHOR

...view details