குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் தொடர்ச்சியாக போராட்டம் நடந்துவருகிறது. இந்நிலையில் அப்பகுதியில் கடந்த ஒன்றாம் தேதி இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை.
இந்நிலையில் அந்த இளைஞரை காவலர்கள் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் பெயர் கபில் குஜ்ஜார் என்பது தெரியவந்தது. இதற்கிடையில் கபில் குஜ்ஜார் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர் என தகவல் பரவியது.
இது அம்மாநில அரசியலில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் கபில் குஜ்ஜாரின் உறவினர்கள், கபிலுக்கு ஆம் ஆத்மியுடன் எவ்வித தொடர்பும் இல்லை என விளக்கம் அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள், “எங்கள் குடும்பத்தை சேர்ந்த யாரும் ஆம் ஆத்மி கட்சியில் உறுப்பினராக இல்லை. இந்த விவகாரத்தில் கபில் குறிவைக்கப்படுகிறார். பாரதிய ஜனதா எப்படியாவது தேர்தலில் வெற்றிப் பெறவேண்டும் என்று விரும்புகிறது. கபில் எந்தக் கட்சியுடனும் தொடர்பில் இல்லை.