தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உயிருக்கு அஞ்சாமல் சிஏஏவை எதிர்க்கும் ஷாஹீன் பாக் போராட்டக்காரர்கள் - கரோனா வைரஸ் பரவல் ஷாஹீன் பாக் போராட்டக்காரர்கள்

டெல்லி: கரோனா அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல் ஊரடங்கு நடைபெறும் மார்ச் 22 ஆம் தேதியும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஷாஹீன் பாக் போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

Bagh
Bagh

By

Published : Mar 20, 2020, 11:03 PM IST

கடந்த மூன்று மாத காலமாக, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் தலைமையில் டெல்லி ஷாஹீன் பாக் பகுதியில் போராட்டம் நடைபெற்றுவருகிறது. டெல்லியில் கோவிட் 19 நோயால் பலர் பாதிப்படைந்த நிலையிலும், அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக, ஒரே இடத்தில் 50 பேர் கூடுவதற்கு டெல்லி அரசு தடை விதித்தது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையை போராட்டக்காரர்கள் 20 ஆக குறைத்துக் கொண்டனர்.

இதனிடையே, மார்ச் 22ஆம் தேதி மக்கள் ஊரடங்கை பின்பற்ற வேண்டும் என நாட்டு மக்களிடையே உரையாற்றிய மோடி தெரிவித்தார். கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும் மார்ச் 22ஆம் தேதி போராட்டம் நடைபெறும் என ஷாஹீன் பாக் போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். நோய் தாக்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக போராட்டக்காரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கு கரோனா?

ABOUT THE AUTHOR

...view details