தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா - அனல் பறந்த விவாதம்! - Shah tables CAB in LS

டெல்லி: குடியரிமை சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் உள் துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார்.

Lok sabha
Lok sabha

By

Published : Dec 9, 2019, 8:11 PM IST

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மதங்களின் அடிப்படையில் பாகுபாடு காண்பிக்கப்பட்டு இந்தியா வந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வழிசெய்வதே குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019. இந்து, கிறிஸ்தவம், சீக்கியம், பார்சி, சமணம் ஆகிய ஏதேனும் ஒரு மதத்தைச் சார்ந்தவராக இருந்தால் மட்டுமே குடியுரிமை வழங்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்களுக்கு மசோதாவில் குடியுரிமை வழங்க வழிசெய்யாததை காங்கிரஸ், திரிணாமுல், திமுக, சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம், இடதுசாரிகள் உள்பட பல எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கடுமையாக விமர்சித்துவந்தன. வங்கதேசத்திலிருந்து வரும் இந்துக்களுக்கு குடியுரிமை வழங்குவதை எதிர்த்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் நடத்தப்பட்டது. அவர்களின் வருகையால் பூர்வகுடி மக்களின் உரிமை பறிக்கப்படும் என கருத்து வலுத்துவந்த நிலையில், மசோதாவை மக்களவையில் உள் துறை அமைச்சர் அமித் ஷா இன்று தாக்கல் செய்தார்.

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பைத் தாண்டி, 293 உறுப்பினர்களின் ஆதரவோடு மக்களவையில் மசோதா தாக்கலானது. தாக்கல் செய்து பேசிய உள் துறை அமைச்சர் அமித் ஷா, "அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பகுதியையும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மீறவில்லை. அரசியலமைப்புச் சட்டம் 14ஆவது பிரிவின்படி அனைவரும் சமம். தேவைக்கேற்ப சட்டங்களைத் திருத்திக்கொள்ளலாம்.

அமித் ஷா

1971ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போருக்குப் பிறகு வங்கதேசத்திலிருந்து குடியேறியவர்களுக்கு இந்திரா காந்தி குடியுரிமை வழங்கினார். அப்போது, பாகிஸ்தான் நாட்டிலிருந்து வந்தவர்களுக்கு ஏன் குடியுரிமை மறுக்கப்பட்டது? முந்தைய அரசுகள் உகாண்டா நாட்டிலிருந்து வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டது. மற்ற நாடுகளில் சில கட்டுப்பாடுகளுடன் குடியுரிமை வழங்கப்படுகிறது. மதத்தின் அடிப்படையில் நாட்டை காங்கிரஸ் பிரிக்காமல் இருந்திருந்தால், இந்த மசோதா தேவைப்பட்டிருக்காது" என்றார்.

நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்திந்திய ஜனநாயக முன்னணி தலைவர் பக்ருதீன் அஜ்மல் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து அவர், "இந்த மசோதாவை நாங்கள் நிராகரிப்போம். எங்களுக்கு எதிர்க்கட்சியினரின் ஆதரவு உள்ளது. மசோதா நிறைவேறவிட மாட்டோம்" என்றார்.

பக்ருதீன் அஜ்மல்

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை இறுதிவரை எதிர்க்கப்போவதாகத் தெரிவித்தார். சிறுபான்மையினருக்கு எதிராக மசோதா இருப்பதாக காங்கிரஸ் மக்களவைக் குழுத் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், நாட்டில் வாழும் 0.01 விழுக்காடு சிறுபான்மையிருக்கு எதிராகக்கூட மசோதா இல்லை என அமித் ஷா பதிலடி கொடுத்தார்.

அகிலேஷ் யாதவ்

ஆர்.எஸ்.பி. கட்சியைச் சேர்ந்த பிரேமசந்திரன், "இந்திய வரலாற்றில் முதல்முறையாக மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்கப்படுகிறது" என்றார்.

பிரேமசந்திரன்

காங்கிரஸ் மூத்தத் தலைவர் சசி தரூர், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக்கு எதிரான தாக்குதல் எனக் குற்றஞ்சாட்டினார்.

சசி தரூர்

திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், "மேற்கத்திய நாடுகள், இந்தியாவைத் தனிமைப்படுத்திவிடும் என்ற பயத்தால் கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள இஸ்லாமியர்கள் இந்தியா வர விரும்பினால், அவர்களுக்கு குடியுரிமை வழங்க என்ன சட்டம் உங்களிடம் உள்ளது? "எனக் கேள்வி எழுப்பினார்.

தயாநிதி மாறன்

இதையும் படிங்க: நிர்பயா வழக்கு: தயாராகும் தூக்குக் கயிறு?

ABOUT THE AUTHOR

...view details