தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய யூசப்புக்கு பிணை வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்.! - உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும்

டெல்லி: புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய யூசப்புக்கு பிணை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, இதற்குப் பொறுப்பேற்று உள் துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

Congress
Congress

By

Published : Feb 28, 2020, 10:16 PM IST

கடந்தாண்டு பிப்ரவரி 14ஆம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், மத்திய ஆயுதக் காவல் படையைச் சேர்ந்த 40 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. இந்தத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் யூசப் சோபன் எனக் குற்றஞ்சாட்டப்பட்டது.

குறிப்பிட்ட காலத்திற்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல்செய்ய தவறிய காரணத்தால் யூசப் சோபனுக்கு பிணை வழங்கி தேசிய புலனாய்வு முகமையின் சிறப்பு நீதிபதி பர்வான் சிங் உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக தேசிய புலனாய்வு முகமை வெளியிட்ட அறிக்கையில், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக சோபன் கைதுசெய்யப்படவில்லை எனத் தெரிவித்திருந்தது.

பிணை வழங்கப்பட்டதை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்த நிலையில், செய்தியாளர் சந்திப்பு ஒன்றையும் நடத்தியது. அப்போது பேசிய அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி, "தகுந்த ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் யூசப் சோபனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சோபன் கைதுசெய்யப்படவில்லை என தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் செய்தியாளர் சந்திப்பு

இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை வெளியிட்ட அறிக்கையில் அலுவலரின் கையெப்பம் இடம்பெறவில்லை. இது குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதா இல்லையா என்பதை அரசு விளக்க வேண்டும். இதற்குப் பொறுப்பேற்று உள் துறை அமைச்சர், தேசிய புலனாய்வு முகமையின் தலைவர் ஆகியோர் பதவி விலக வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: கனையா குமார் மீதான தேசத்துரோக வழக்கு: நடவடிக்கை எடுக்க டெல்லி அரசு அனுமதி

ABOUT THE AUTHOR

...view details