தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அபாயத்தில் சிக்கிக் கொண்ட பெண்களுக்கு உளவியல் நிபுணர் தரும் ஆலோசனை

ஹைதராபாத்: அபாயகரமான சூழலில் சிக்கிக்கொண்ட பெண்களுக்கு உளவியல் நிபுணர் கல்யாண் சக்ரவர்த்தி தரும் சில ஆலோசனைகள் இதோ...

Women
Women

By

Published : Dec 11, 2019, 11:28 PM IST

ஆபத்து நிகழும் நேரத்தில் திடமாகவும் தைரியமாகவும் இருப்பது சிறப்பான இயல்பாகும். திடீர் தாக்குதலின்போது நிலைகுலையும் மனப்போக்கில் இருப்பவர்கள் எதிரிகளால் எளிதில் வீழ்த்தப்படுவார்கள் என உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அண்மையில் நடைபெற்ற ஹைதராபாத் பாலியல் வன்கொடுமை அதற்கு நல்ல உதாரணம்.

பாதிப்புக்குள்ளான நபரை அந்த அபாயகரமான சூழலிலும் நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக பேசி ஏமாற்றியுள்ளனர் குற்றவாளிகள். வண்டி பஞ்சராகி ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் சிக்கியப் பெண் உச்சபட்ச விழிப்புணர்வுடன் செயல்பட்டிருக்க வேண்டும் என்கிறார் உளவியல் நிபுணர் கல்யாண் சக்ரவர்த்தி.

மேலும் அவர், இதுபோன்ற அபாயகரமான சூழலில் சிக்கிக்கொண்டவர்களுக்கு சில ஆலோசனைகளையும் தெரிவிக்கிறார்.

ஆலோசனைகள்:

  • ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் முன்பின் தெரியாத நபர் உதவிக்கு வரும்பட்சத்தில் மாட்டிக்கொண்ட நபர் முதலில் உஷாராக இருக்க வேண்டும். அங்கிருந்து தப்பிச் செல்வதற்கான வழிமுறைகளை விரைந்து கண்டறிய வேண்டும்.
  • உங்களிடமிருந்து சொந்த தகவல்களை கேட்கும் வெளிநபர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உதவி செய்யவருபவர்களில் 100-க்கு 99 பேர் நல்லெண்ணத்தில் இருந்தாலும் ஒரு நபரின் பாதிப்புமிக்க செயல் மோசமான விளைவை ஏற்படுத்திவிடும்.
  • தவறான நோக்கத்தில் நம்மை அந்த நபர் நெருங்குகிறாரா என்பதை கவனமாக உற்றுநோக்க வேண்டும் அப்படியெனில் உடனடியாக விலகிவிட வேண்டும்.
  • தற்காப்பு ஆயுதங்களாக மிளகு ஸ்பிரே, தண்ணீர் பாட்டில், கூர்மையான பேனா, பென்சில் போன்ற உபகரணங்களை எப்போது கைப்பையில் வைத்திருப்பது நலம். தற்காப்புக்காக நடத்தப்படும் தாக்குதல் குற்றமாகக் கருதப்படாது.
  • வண்டி பாதி வழியில் பழுதடைந்து நின்றால் உடனடியாக உறவினர்களிடம் தெரிவிக்க வேண்டும். அடுத்தாக 100 அவசர அழைப்புக்கு தொடர்புகொண்டு காவல் துறையை அணுக வேண்டும்.
  • நாம் உஷாராகவும் தைரியமாகவும் இருக்கிறோம் என்று தெரியும்பட்சத்தில் எதிரி நம்மை சீண்ட ஒருமுறைக்கு இருமுறை யோசனை செய்வார்.
  • எளிதாக இருக்கிறதே என குறுக்கு வழியில் செல்வதைத் தவிர்த்து மக்கள் அதிகம் பயன்படுத்தும் வழிகளையே பயன்படுத்தவும்.
  • வண்டி பழுதடைந்தால் தவிர்க்க முடியாதபட்சத்தில் வண்டியை அங்கேயே பூட்டிவிட்டு முதலில் வீடு திரும்பவும். உடமையைவிட உயிர்தான் முக்கியம் என்பதை நினைவில் கொள்ளவும்.

ABOUT THE AUTHOR

...view details