அரபிக் கடலில் உருவான மகா புயல் வலுவடைந்துள்ள நிலையில் குஜராத் மாநிலம் போர்பந்தருக்கு மேற்கு தென்மேற்கே 650 கிலோ மீட்டர் தொலைவிலும், வேரவாலில் மேற்கே தென்மேற்கே 200 கிலோ மீட்டர் தொலைவிலும், நிலை கொண்டுள்ளது. இந்தப் புயல் டையூ போர்பந்தர் இடையே நாளை காலை கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் இன்னும் ஆறு மணி நேரத்தில் 29 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் வீச வாய்ப்பிருக்கிறது. புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால், கனமழை அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பாவ் நகர், சூரத், அகமதாபாத், வதோதரா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.