தமிழ்நாடு

tamil nadu

14 மாநிலங்களில் பரவலான கரோனா பரிசோதனை தேவை

தேசிய சராசரி அளவை விட அதிகப்படியான கரோனா பாதிப்புள்ள 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பரவலான சோதனைகள் அவசியம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

By

Published : Oct 23, 2020, 12:47 PM IST

Published : Oct 23, 2020, 12:47 PM IST

Several States, UTs exhibiting higher COVID-19 positivity rate than national average: Health Ministry
Several States, UTs exhibiting higher COVID-19 positivity rate than national average: Health Ministry

டெல்லி: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் தகவல் படி, இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் பாதிப்பு எண்ணிக்கை 7.81 விழுக்காடாக உள்ளது. அதுமட்டுமின்றி, தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3.8 விழுக்காடாக உள்ளது.

ஆனால், மகாராஷ்டிரா 20.4 விழுக்காட்டுடன் நாட்டில் முதலிடத்திலும், புதுச்சேரி 18.2 விழுக்காட்டுடன் இரண்டாம் இடத்திலும், கேரளா 17.8 விழுக்காட்டுடன் மூன்றாம் இடத்திலும் கரோனா பாதிப்புகளை கொண்டுள்ளது.

இதில், 10 லட்சம் மக்களுக்கு மகாராஷ்டிராவில் 64 ஆயிரத்து 473 சோதனைகளும், புதுச்சேரியில் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 513 சோதனைகளும், கேரளாவில் 57 ஆயிரத்து ஒன்பது சோதனைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதேபோல, நாகாலாந்து, சண்டிகர், கோவா, கர்நாடகா, ஆந்திரா, லடாக், சத்தீஸ்கர், அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கரோனா பாதிப்பு அதிகளவில் ஏற்பட்டுள்ளது. மேலும், தேசிய தலைநகர் டெல்லி 8.1 விழுக்காட்டுடன் அதிகளவு பாதிப்புள்ள மாநிலங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த 14 மாநிலங்கள் மற்றும் யூனியந் பிரதேசங்களில் பரவலான சோதனைகளை அதிகப்படுத்துவது அவசியம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details