ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வலுவிழக்கும் தெலுங்கு தேசம் கட்சி! - Leaders joining BJP

ஹைதராபாத்: தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த பல தலைவர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர்.

Chadrababu Naidu
author img

By

Published : Oct 4, 2019, 10:59 AM IST

ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் கட்சியை பலப்படுத்த பாஜக பல முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. முக்கியமாக, ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த பல முக்கியத் தலைவர்களை பாஜக தன்பக்கம் இழுத்துவருகிறது.

மாநிலங்களவையில் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்களில் நான்கு பேர் பாஜகவிற்குச் சென்றனர். கட்சி மாறிய நான்கு பேரும் சந்திரபாபு நாயுடுவுக்கு நெருக்கமானவர்கள்.

இந்நிலையில், தெலங்கானா மாநில தெலுங்கு தேசம் கட்சியின் இளைஞரணித் தலைவர் வீரேந்திர கௌத் உள்பட பல தலைவர்கள் நேற்று பாஜக செயல் தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.இது தெலுங்கு தேசம் கட்சிக்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

2014ஆம் ஆண்டுக்கு பிறகு நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பல முக்கிய கட்சிகளின் தலைவர்கள் பாஜகவில் இணைந்தது பெரிய அளவில் அக்கட்சிக்கு தேர்தலில் உதவியது என்றே சொல்லலாம்.

ABOUT THE AUTHOR

author-img

...view details