கேரள மாநிலம், திருச்சூர் குத்திரான் தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை வழக்கம்போல் வாகனங்கள் ஒன்றின் பின் ஒன்றாக சென்று கொண்டிருந்தன. அப்போது அவ்வழியே சென்ற லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்றுகொண்டிருந்த பிற வாகனங்கள் மீது மோதியது.
லாரி மோதியதில் நொறுங்கிய வாகனங்கள் இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே மூவர் உயிரிழந்தனர். மேலும், காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
திருச்சூர் தேசிய நெடுஞ்சாலை விபத்து இந்த விபத்து காலை 6.45 மணியளவில் நடந்துள்ளது. இந்த விபத்தில் கார் உள்ளிட்ட ஏழு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. காவல்துறையும் தீயணைப்புப் படையினரும் தொடர்ந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சூர் தேசிய நெடுஞ்சாலையில் ஏழு வாகனங்கள் மீது லாரி மோதி விபத்து இந்த விபத்தைத் தொடர்ந்து குதிரான் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.