ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் நேற்று (ஜூலை 30) மதுபானக் கடைகள் மூடப்பட்டிருந்ததால் உள்ளூர் வாசிகளுக்கு மதுபானம் கிடைக்கவில்லை. இதனால், செய்வதறியாது திகைத்த மதுப்பிரியர்களுக்கு திடீரென ஒரு யோசனை வந்தது. மதுபானம் கிடைக்கவில்லையென்றால் என்ன ஆல்கஹால் சானிடைசரை குடிப்போம் என எண்ணி, கும்பலாக சேர்ந்து ஆல்கஹால் சானிடைசரை குடித்தனர்.
ஆந்திராவில் சானிடைசரை குடித்த 9 பேர் உயிரிழப்பு! - ஆந்திரா உயிரிழப்பு
அமராவதி: ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் சானிடைசரை குடித்த ஒன்பது பேர் உயிரிழந்தனர்.
ஆந்திராவில் சானிடைசரை குடித்த 7பேர் உயிரிழப்பு
இதில், நேற்றிரவு நான்கு பேர் உயிரிழந்த நிலையில், இன்று (ஜூலை 31) காலை ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக உள்ளூர் வாசிகள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க:மது என எண்ணி சானிடைசரை அருந்திய கைதி மரணம்!