தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 7 பேர் பலி...

காந்திநகர்: கழிவுநீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்த நான்கு துப்புரவு தொழிலாளர்கள் உள்பட ஏழுபேர் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்த சம்பவம் குஜராத் மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோப்புபடம்

By

Published : Jun 15, 2019, 2:10 PM IST

குஜராத் மாநிலம், வதோதரா மாவட்டம், ஃபார்டிகுய் கிராமத்தில் அமைந்துள்ளது தர்ஷன் ஹோட்டல். இந்த ஹோட்டலில் உள்ள கழிவு நீர் தொட்டியில் நான்கு துப்புரவு தொழிலாளர்கள் கயிறு வழியாக இறங்கி சுத்தம் செய்தனர். அவர்களுக்கு உதவியாக மூன்று பேர் மேலே நின்றுள்ளனர்.

அப்போது வெளியேறிய விஷ வாயு காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டு தொட்டியில் இறங்கிய நான்கு பேர் மற்றும் வெளியில் அவர்களுக்கு உதவி செய்த மூன்று பேர் உள்பட ஏழு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்தவர்களின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details