கொகிமா:நாகாலாந்து, மணிப்பூர் எல்லையில் அமைந்துள்ள இட்சூக்கோ பள்ளத்தாக்கில் பயங்கர காட்டுத்தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் பிரபல மலையேற்றப் பகுதியில் மளமளவென பரவி வரும் காட்டுத்தீயை அணைக்கும் பொருட்டு, தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தைச் சேர்ந்த 48 வீரர்கள் அடங்கிய ஏழு மீட்புக் குழுவினர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.
அதேபோல், இந்திய விமானப் படையின் எம்ஐ-17 வி5, சி-130ஜே விமானங்கள் தீயணைப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.