சீனாவின் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கோவிட் -19 வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் இதுவரை எட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸால், சீனா, இத்தாலி, ஈரான், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
இந்தியாவிலும் கோவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். இந்நிலையில், தெலங்கானா மாநிலத்தில் ஏற்கனவே ஆறு பேர் இந்த கோவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று ஒரே நாளில் ஏழு பேருக்கு கோவிட் -19 வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.