ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், வேதத்ரியில் உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலுக்கு, தெலங்கானா மாநிலம், கம்பம் மாவட்டத்தைச் சேர்ந்த 28 பேர் டிராக்டர் மூலம் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து, டிராக்டர் எதிரே வந்த லாரியின் மீது மோதியது. இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.
இவ்விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், அங்கு பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட 16 பேரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு, சிகிச்சைப் பெற்றுவருவதில் நான்கு பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.