உலகம் முழுவதும் கரோனா தொற்று பாதிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. நூற்றுக்கணக்கான மருந்துகள் பரிசோதனைக் கட்டத்தில் உள்ளன. அதன்படி, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் அஸ்ட்ரா ஜெனகா மருந்து நிறுவனமும் இணைந்து தயாரித்த கோவிஷீல்ட் தடுப்பூசி மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை நடைபெற்று வருகிறது.
இந்த மருந்து பல நாடுகளில் உள்ள தன்னார்வலர்களுக்கு செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் நடைபெறவுள்ள இந்த மருந்தின் பரிசோதனையில் ஆயிரத்து 600 பேர் கலந்துக்கொள்ள திட்டமிட்டிருந்தனர்.