தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'கரோனா ஆராய்ச்சிகள் இன்னும் முழுமையாக முடியவில்லை'

டெல்லி: கரோனா பாதித்தவர்களின் உடலில் ஏற்படும் திரவங்களின் மாற்றங்கள் குறித்த ஆராய்ச்சிகள் இன்னும் முடியவில்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.

corona virus
corona virus

By

Published : Jun 10, 2020, 11:54 AM IST

நாட்டில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள்தான் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ஆய்வு ஒன்றை நடத்தி அறிக்கை தயாரித்துள்ளது. இந்த அறிக்கையானது மத்திய கேபினட் செயலர், பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அதில், "முக்கிய நகரங்களில் கரோனா பாதிப்பு விகிதம் அதிகரித்திருக்கிறது. நோய் பாதித்த அதிதீவிர பகுதிகளைவிட இந்த நகரங்களில்100 மடங்கு பாதிப்பு இருக்கிறது.

இதனடிப்படையில்தான் நோய்க்கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் அல்லது பாதிக்கப்பட்டு குணமடைந்து இருக்கலாம்" எனக் குறிப்பிட்டுள்ளது.

கரோனா பாதித்தவர்களின் உடலில் ஏற்படும் திரவங்களின் மாற்றங்கள் குறித்த ஆராய்ச்சிகள் இன்னும் முடியவில்லை எனவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: லேஸ், குர்குரே அடைக்கப் பயன்படும் பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை!

ABOUT THE AUTHOR

...view details