தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா அச்சத்திலும் துள்ளிக் குதித்த காளை!

மும்பை: இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று உயர்வுடன் வர்த்தகத்தை தொடங்கின.

Sensex rallies over 900 pts; Nifty reclaims 9  000-mark  business news  sensex  nifty  BSE  NSE  கரோனா அச்சத்திலும் துள்ளி குதித்த காளை  பங்குச் சந்தை இன்றைய நிலவரம்
Sensex rallies over 900 pts; Nifty reclaims 9 000-mark business news sensex nifty BSE NSE கரோனா அச்சத்திலும் துள்ளி குதித்த காளை பங்குச் சந்தை இன்றைய நிலவரம்Sensex rallies over 900 pts; Nifty reclaims 9 000-mark business news sensex nifty BSE NSE கரோனா அச்சத்திலும் துள்ளி குதித்த காளை பங்குச் சந்தை இன்றைய நிலவரம்

By

Published : Apr 9, 2020, 2:35 PM IST

இந்தியப் பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமை வர்த்தகம் உயர்வுடன் தொடங்கியது. மும்பை பங்குச் சந்தையை பொறுத்தமட்டில் 900 புள்ளிகள் வரை உயர்ந்து வர்த்தகமானது.

தகவல் தொழில்நுட்பம், நிதி மற்றும் உணவு சார்ந்த பொருட்கள் என 30 நிறுவன பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகம் ஆகின. தேசியப் பங்கு சந்தை நிஃப்டி 270.05 புள்ளிகள் (3.09) உயர்வைக் கண்டு 9,018.80 புள்ளிகளாக உள்ளது.

நிபுணர்களின் கூற்றுப்படி, “பூட்டுதல் காலம் முடிவடைவதற்கு முன்னர், ஆரம்ப அமர்வில் முதலீட்டாளர்களின் முதலீடு உணர்வு தூண்டப்பட்டுள்ளது. இதனால் உலகச் சந்தைகள் மீண்டுவருகின்றன.

இதன் தாக்கம் காரணமாக இந்தியச் சந்தைகளின் வேகமும் அதிகரித்துள்ளது” என்கின்றனர். கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 1.55 விழுக்காடு வரை உயர்ந்து 33.34 அமெரிக்க டாலராக வர்த்தகம் ஆகிறது.

இந்தியாவில் கரோனா (கோவிட்-19) வைரஸ் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 166 ஆகவும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,734 ஆகவும் உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தொற்றுநோய்களின் உலகளாவிய எண்ணிக்கை 14.8 லட்சத்தை தாண்டியுள்ளது. 88 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details