தெலங்கானா மாநிலம் சத்துப்பள்ளியில் உள்ளது மதர் தெரசா இன்ஸ்டிடியூட் ஆப் சைன்ஸ் ஆன்ட் டெக்னாலஜி. இந்த கல்லூரியில் சீனியர்கள், ஜூனியர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் சம்பவம் நிகழ்வது வழக்கமான ஒன்றாகும். அந்த வகையில், வேளாண்துறையில் மூன்றாம் ஆண்டு படிக்கும் சிவகணேஷ், தன் சீனியர்கள் பற்றி தவறாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
மாணவர்களுக்கு இடையே மோதல்! 3 பேர் கைது - மாணவர்கள்
ஹைதராபாத்: சத்துப்பள்ளியில் உள்ள தனியார் கல்லூரியைச் சேர்ந்த மாணவரை, அதே கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் தாக்கிய சம்பவம் சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்களுக்கு இடையே மோதல்!
இதற்கு பழிவாங்கும் நோக்கில், அந்த கல்லூரி சீனியர்கள், சிவகணேஷை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனை சிவகணேஷின் செல்போனிலேயே வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளனர். சமூக வலைதளத்தில் உலா வந்த இந்த வீடியோவை பார்த்த காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி மூன்று மாணவர்களை கைது செய்துள்ளனர்.