தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கர்‘நாடக’ அரசியல் குழப்பம்; எடியூரப்பாவை முந்தும் பாஜகவின் 2ஆம் அணி! - அமித்ஷாவுடன் சந்திப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் எடியூரப்பா முதலமைச்சராவதில் சிக்கல் நிலவுவதாகக் கூறப்பட்டுவந்த நிலையில், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை கர்நாடக பாஜக குழு இன்று டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா

By

Published : Jul 25, 2019, 1:17 PM IST

கர்நாடக சட்டப்பேரவையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்தது. இதையடுத்து முதலமைச்சர் பதவியிலிருந்து குமாரசாமி விலகினார். இதையடுத்து, பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற்று நாளை எடியூரப்பா பதவியேற்பார் என்று கூறுப்பட்டுவந்த நிலையில், கர்நாடக மாநில பாஜக முக்கிய நிர்வாகிகள் டெல்லி சென்றுள்ளனர்.

இந்த நிலையில்தான் முன்னாள் முதலமைச்சரான ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையிலான பாஜக குழு ஒன்று, டெல்லிக்குச் சென்று பாஜக தேசியத் தலைவரும், மத்திய உள் துறை அமைச்சருமான அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்திவருகிறது.

ஜெகதீஷ் ஷெட்டர், எடியூரப்பாவைப் போலவே லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்தவர்; எடியூரப்பாவுக்கு மாற்றாக முன்பு முதலமைச்சர் பதவியில் அமர வைக்கப்பட்டவர். இந்நிலையில் அமித் ஷாவுடன் ஜெகதீஷ் ஷெட்டரின் சந்திப்பு எடியூரப்பா ஆதரவாளர்களுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details