கன்னட மொழி அறிஞர், எழுத்தாளர், கல்வெட்டு ஆராய்ச்சியாளர் என பன்முகம் கொண்ட டாக்டர். எம். சிதானந்த மூர்த்தி உடல் நலக்குறைவு காரணமாகவும் வயது முதிர்வு காரணமாகவும் இன்று காலமானார். அவருக்கு வயது 88.
பிரபல கன்னட அறிஞர் காலமானார் - ஹம்பி நினைவுச் சின்னங்கள்
பெங்களுரு: பிரபல கன்னட அறிஞர் டாக்டர். எம். சிதானந்தா மூர்த்தி இன்று காலமானார்.
உடல் நலக்குறைவு பிரச்னையால் அவதிப்பட்ட வந்த சிதானந்தா மூர்த்தி பெங்களுருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவரது உயிர் இன்று அதிகாலை 3:30 மணியளவில் பிரிந்தது. இவர் ஹம்பியிலுள்ள வரலாற்றுச் சின்னங்களை காக்க வேண்டும் என்ற பரப்புரையை முன்னெடுத்தவர் ஆவார்.
கன்னட அறிஞர் சிதானந்தா மூர்த்தியின் மரணத்துக்கு முதலமைச்சர் எடியூரப்பா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “அவர் ஒரு சிந்தனையாளர். வரலாற்றாளர், ஆய்வாளர். கன்னடத்தின் நலனுக்காகப் பணியாற்றியவர். வரலாற்றில் அவரது இடம் தனித்துவமானது. அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதது. ஹம்பியின் நினைவுச் சின்னங்களைப் பாதுகாப்பதிலும், கன்னட மொழிக்கு பழம்பெரும் மொழி அந்தஸ்து வாங்கிக் கொடுத்ததிலும் அவரது செயல் அளப்பரியது” எனக் கூறியுள்ளார்.