தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'முறைகேடு குறித்து தனக்கு எதுவும் தெரியாது' - ஐ.டி. ரெய்டு குறித்து பரமேஸ்வர் விளக்கம்! - parameshwar

பெங்களூரு: வீடு, கல்லூரி ஆகிய இடங்களில் நடந்த வருமான வரித்துறை ரெய்டு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் பரமேஸ்வர் விளக்கம் அளித்துள்ளார்.

Parameswar

By

Published : Oct 10, 2019, 6:20 PM IST

கர்நாடக காங்கிரஸ் மூத்தத் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஜி.பரமேஸ்வரின் வீடு மற்றும் கல்வி நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

மருத்துவக் கல்லூரி முறைகேடு தொடர்பாக இந்த விசாரணை நடந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஜி.பரமேஸ்வர் விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில், "மருத்துவக் கல்லூரியில் முறைகேடு நடந்ததாகக் கூறுவது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அந்தக் கல்லூரி 50 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்கது. என் தந்தை எனக்கு கொடுத்தது" என்றார்.

காங்கிரஸின் மூத்த தலைவர் பரமேஸ்வரின் வீடு மற்றும் கல்வி நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியிருப்பதை எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா கடுமையாக விமர்சித்துள்ளார். அதேபோல் மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களும் விமர்சித்துள்ளனர்.

இதையும் படிக்கலாமே

கர்நாடக எதிர்கட்சித் தலைவராக சித்த ராமையா நியமனம்

ABOUT THE AUTHOR

...view details