காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அவர்களின் கூட்டணி ஆட்சி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றது. இதனைத் தொடர்ந்து, அவர்களை தகுதி நீக்கம் செய்து கர்நாடகா சபாநாயகர் உத்தரவிட்டார்.
கர்நாடக பாஜகவில் தொடரும் குழப்பம்! - கர்நாடக பாஜக
பெங்களூரு: தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை பாஜக அளிக்கவுள்ளதால், அக்கட்சியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவித்துள்ளது. காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு பாஜக சார்பாக இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்திருந்தார். இந்த கருத்தால் அம்மாநில பாஜகவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மூத்தத் தலைவர்களுக்கும் கட்சிக்காக உழைத்தவர்களுக்கும் வாய்ப்பளிக்காமல் வேறு கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு இடைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிப்பதாக தெரிவித்த கருத்து கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, கட்சியின் பல மூத்தத் தலைவர்களுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்காததால் குழப்பம் நிலவும் பாஜகவில் இது மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.