கோவிட்-19 தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த மேற்கு வங்க சுகாதாரத் துறை அலுவலர் இன்று காலமானார்.
மேற்கு வங்க மாநில சுகாதார சேவைகளின் உதவி இயக்குநரும், மத்திய மருத்துவக் கடைகளின் பொறுப்பாளருமான 60 வயதான அலுவலர் ஒருவருக்கு கரோனா நோய்க் கிருமித் தொற்று கண்டறியப்பட்டு, ஆரம்ப கட்டத்தில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், அவருக்கு ஏப்ரல் 18 அன்று தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.
சனிக்கிழமை அவரது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, நண்பகல் 1:30 மணிக்கு காலமானார். அவருக்கு நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் ஆகியவை இருந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
ரேபிட் டெஸ்ட் சோதனை தற்போதைக்கு வேண்டாம்: அதன் துல்லியத்தை ஐ.சி.எம்.ஆர் ஆராய்கிறது!
இதுகுறித்து, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பதிவிட்டுள்ள ட்வீட்டில், மாநில உதவி இயக்குநர், சுகாதார சேவைகள், மத்திய மருத்துவக் கடைகள், பிப்லாப் காந்திதாஸ் குப்தாவின் மறைவால் ஆழ்ந்த வேதனை அடைந்துள்ளதாகக் கூறியுள்ளார்.