தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மகாராஷ்டிராவில் கவிழ்கிறது சிவசேனா ஆட்சி?

மும்பை: சிவசேனாவைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Maharashtra
Maharashtra

By

Published : Jan 4, 2020, 12:49 PM IST

சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மகாராஷ்டிராவில் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தன. உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.

அஜித் பவார் மீண்டும் துணை முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும் மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சருமான அசோக் சவான், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்கள் தனஞ்செய் முண்டே, நவாப் மாலிக், சிவசேனாவின் ஆதித்யா தாக்கரே உள்ளிட்ட 36 பேர் அமைச்சர்களாகப் பதவி ஏற்றுக்கொண்டனர். கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த பல மூத்தத் தலைவர்களுக்கு அமைச்சர் பதவி அளிக்காததால் அவர்கள் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், சிவசேனா கட்சியைச் சேர்ந்த அப்துல் சட்டர் என்ற அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கேபினெட் அமைச்சர் பதவி ஒதுக்காத காரணத்தால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததாகவும் கூறப்படுகிறது. அமைச்சர் பதவி விலகியிருப்பது கூட்டணி ஆட்சி கவிழ்வதற்கான முதல் அறிகுறியாக இருக்கலாம் என அரசியல் பார்வையாளர்களும், பாஜகவினரும் கருதுகின்றனர்.

இதையும் படிங்க: மோகினியாட்டம் ஆடிய நடனக் கலைஞர்கள்...

ABOUT THE AUTHOR

...view details