இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரானப் போராட்டங்கள் தொடர்பாக, மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை வாக்கு வங்கி அரசியலுக்குப் பயன்படுத்துவதாக சிவசேனா எம்.பி., சஞ்சய் ரவுத் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக நமது ஈடிவி பாரத் ஊடகத்திடம் சஞ்சய் ரவுத் பேசுகையில், ' இந்திய நாடாளுமன்றத்தின் மாண்புகளைக் காக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசாங்கத்திடம் உள்ளது. மத்திய அரசாங்கம் அதனைத் திறம்பட மேற்கொள்ள முற்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் எந்தவிதமான முரட்டுத்தனத்தையும் பயன்படுத்தாமல், கொந்தளிப்பு நிலையைச் சீர்செய்ய வேண்டும்' என்றார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக, நாட்டில் நடந்து வரும் போராட்டங்கள் குறித்து சிவசேனா என்ன முடிவு எடுத்துள்ளதென கேள்வி எழுப்பப்பட்டபோது, 'குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த சிவசேனாவின் நிலைப்பாட்டை எங்கள் கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே முடிவு செய்வார். அவரது முடிவு எதுவோ அதுவே எங்கள் முடிவாக இருக்கும்' என்று ரவுத் கூறினார்.