லக்னோ: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிக்கு இதுவரை கிடைத்துள்ள நன்கொடை தொடர்பாக ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய் வெள்ளிக்கிழமை உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “அயோத்தி ராமர் கோயில் கட்டுமான பணிக்கு ராமர் பக்தர்களிடம் நன்கொடைகள் கோரப்படும். பக்தர்களிடம் ரூ.10, ரூ.100 மற்றும் ரூ.1000 என வசூலிக்கப்படும்.
இதன் மூலம் அயோத்தி ராமர் கோயிலின் புகைப்படங்களை ஒவ்வொரு பக்தர்களையும் சென்றடையும். இந்தப் பரப்புரையின் மூலம் ஒரு கோடி பேரை சந்திக்க திட்டமிட்டுள்ளோம்.
மேலும், அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்துக்கு சிவசேனா ரூ.1 கோடியும், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தனது தனிப்பட்ட பங்களிப்பாக ரூ.11 லட்சமும் அளித்துள்ளார்” என்றார்.
முன்னதாக சம்பத் ராய் டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, “அயோத்தி ராமர் கோயிலுக்கு வெளிநாடுகளிலிருந்து நிதி திரட்ட அனுமதியில்லை. ஆகவே ஒவ்வொரு ராமர் பக்தர்களின் ஆதரவும் கோரப்படும் என்று தெரிவித்திருந்தார்.
ராமர் கோயிலுக்கு நிதி திரட்டும் பரப்புரை ஜனவரி 15ஆம் தேதி தொடங்கப்பட்டு, பிப்ரவரி 27ஆம் தேதி நிறைவடைகிறது.
இதையும் படிங்க: 'அயோத்தியை இராமாயண நகராக்குவது பிரதமரின் கனவு'- யோகி ஆதித்யநாத்