மும்பை: சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் வெளியாகியுள்ள தலையங்கத்தில், “பாஜக எதிர்ப்பு கட்சிகள் தேசிய அளவில் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், “விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை, அலட்சிய மனப்போக்குடன் அக்கறையின்றி காணப்படுகின்றனர். பிரதான எதிர்க்கட்சி (காங்கிரஸ்) அதன் தலைமை பிரச்னை குறித்து ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
விவசாயிகள் போராட்டம்
மத்திய அரசின் அலட்சியத்துக்கு சிதைந்துபோன, பலவீனமான எதிர்க்கட்சிதான் காரணம். பயனற்ற எதிர்ப்பு ஒருபோதும் பலன் தராது. ராகுல் காந்தி தனித்த போராட்டத்தை நடத்துகிறார்.
எனினும் அதில் ஏதோ ஒரு குறை உள்ளது. காங்கிரஸின் தற்போதைய நிலைமை சுழியம் (பூஜ்யம்) போன்று காணப்படுகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர்களும் விவசாயிகளின் போராட்டத்தை பெரிதாக எடுத்துக்கொண்டதாக தெரியவில்லை.
பாஜக எதிர்ப்பு கட்சிகள்
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஒரு தனித்த ஆளுமை. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தனித்து நின்று ஒரு போரை நடத்துகிறார். இந்த நேரத்தில் நாட்டின் எதிர்க்கட்சிகள் அவருடன் நிற்க வேண்டும். மம்தா பானர்ஜி பவாரை மட்டுமே தொடர்பு கொண்டுள்ளார். அவர் வங்காளத்திற்கு செல்வார். ஆனால் காங்கிரஸின் தலைமையில் இது செய்யப்பட வேண்டும்.
திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, அகாலிதளம், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி அகிலேஷ் யாதவ், ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், தெலங்கானாவைச் சேர்ந்த கே சந்திரசேகர் ராவ், ஒடிசாவின் நவீன் பட்நாயக், கர்நாடகாவின் ஹெச்.டி குமாரசாமி ஆகியோரும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் சேர வேண்டும்.
கமல்நாத் அரசு கவிழ்ப்பு