தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

செல்ஃபி மோகத்தில் இரண்டரை வயது மகனை கடல் அலையில் தவறவிட்ட தாய்! - ஆலப்புழா கடல் அலையில் அடித்துச்செல்லப்பட்ட சிறுவன்

திருவனந்தபுரம்: ஆலப்புழா கடற்கரையில் தாயார் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்த போது, அவரது இரண்டரை வயது மகன் கடல் அலையில் அடித்துச்செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

hilschils
hils

By

Published : Sep 15, 2020, 4:55 PM IST

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்தவர்கள் லக்ஷமன் - அனிதா தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு அனிதா தனது பிள்ளைகளை அழைத்துக்கொண்டு திருமண விழாவில் பங்கேற்க ஆலப்புழாவிற்கு சென்றார்.

பின்னர், ஆலப்புழா கடற்கரையை சுற்றிப்பார்க்க சென்ற அனிதா, தனது குழந்தைகளுடன் உறவினர் குழந்தையையும் அழைத்து சென்றார். அப்போது, வானிலை மிகவும் மோசமாக காணப்பட்டதால், கடல் சீற்றம் ஏற்பட்டது.

இருப்பினும், சிறுவர்களை கடற்கரைக்கு அழைத்து சென்ற அனிதா, அங்கு நின்றப்படி செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென் வந்த பெரிய அலையில் நான்கு பேரும் நிலைதடுமாறி விழுந்தனர். அப்போது, அனிதா கையிலிருந்த இரண்டரை வயது குழந்தை அதிகிருஷ்ணா கடல் அலையில் அடித்து செல்லப்பட்டான். மற்ற இரண்டு சிறுவர்களையும் பத்திரமாக பிடித்துக்கொண்ட அனிதா, கரைக்கு கொண்டு வந்தார்.

தகவலறிந்து வந்த கடற்படையினரும், மீட்பு படையினரும் குழந்தையை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். இறுதியாக, இன்று (செப்டம்பர் 15) குழந்தையின் சடலத்தை மீட்டு இறுதிச் சடங்கு நடத்துவதற்காக குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details