கர்நாடக மாநிலம், சார்மடிமலை வழியாகச் செல்கிறது பெங்களூரு - சிக்கமகளூரு தேசியநெடுஞ்சாலை. இந்த மலையின் மேலே நின்று கொண்டு ஒருவர் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார்.
செல்ஃபி மோகம்: 100 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்த நபர்! - charmadi
பெங்களூரு: கர்நாடகாவில் சார்மடி மலைப்பாதையில் செல்பி எடுக்க முயன்ற ஒருவர் 100 அடி உயரத்திலிருந்து கிழே விழுந்த சம்பவம் வாகன ஓட்டிகளை அதிர்ச்சியில் உரைய வைத்துள்ளது.
selfie
அப்போது, கால்தவறிய அவர் பாறைகளில் சருக்கிக் கொண்டே கீழே இருந்த சாலையில் விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அந்த வழியே சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தற்போது அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.