தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உத்தரப் பிரதேசத்தில் போலீசாரை நோக்கி வாளைச் சுழற்றிய பெண்! - Coronavirus

தன்னைத் தானே கடவுள் என பிரகடனப் படுத்திக்கொள்ளும் பெண் ஒருவர் தனது ஆசிரமத்தில் நடத்திய பிரார்த்தனையை காவல்துறையினர் நிறுத்தக்கூறியதால், அவர்களை நோக்கி அந்தப் பெண் வாளைச் சுழற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

By

Published : Mar 25, 2020, 11:40 PM IST

உத்திரப் பிரதேசம் மாநிலம் தியோரியாவில் தன்னைத் தானே கடவுள் என கூறிக்கொள்ளும் பெண் ஒருவர், ஊரடங்கு உத்தரவை மீறி மக்களைக் கூட்டி பிரார்த்தனை கூட்டத்தை நடத்தியுள்ளார். அந்தக்கூட்டத்தை காவல்துறையினர் நிறுத்தக்கூறியதால் அந்தப் பெண் வாளை எடுத்து காவலர்களை நோக்கி சுழற்றி எச்சரிக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

அந்த வீடியோவில், அங்கு நிலவிய அசாதாரண சூழலை கட்டுக்குள் கொண்டு வர காவல்துறையினர் நடத்திய லேசான தடியடியும் பதிவாகியுள்ளது. இது குறித்து பேசிய அரசு அதிகாரி ஒருவர், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நேரத்தில் மக்களின் வாழ்க்கையை ஆபத்தில் தள்ளுவதை அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்தார். ஊரடங்கு உத்தரவை மீறி மக்களைக் கூட்டி பிரார்த்தனை நடத்திய பெண்ணின் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க:கரோனா அறிகுறி: இளவரசர் சார்லஸ் எப்படி இருக்கிறார்?

ABOUT THE AUTHOR

...view details