பழமை வாய்ந்த சீதளா தேவி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்: பக்தர்கள் தரிசனம் - கோயில் மகா கும்பாபிஷேகம்
புதுச்சேரி: பழமை வாய்ந்த சீதளா தேவி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த கோட்டுச்சேரியில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த சீதளா தேவி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.
பழமை வாய்ந்த இவ்வாலயத்தில் 12ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு மஹா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.
அக்டோபர் 26ஆம் தேதி முதல் கால யாகசாலை பூஜையுடன் தொடங்கிய கும்பாபிஷேக விழா இன்று ( அக்டோபர் 29) ஆறாம் கால யாகசாலை பூஜையுடன் முடிவுற்றது.
இதனை தொடர்ந்து யாகத்தில் பூஜித்த புனித நீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் ஏந்தி ஆலயத்தை வலம் வந்து ராஜகோபுரம், ஆலய விமானங்கள், பரிவார தெய்வங்களுக்கு வேத மந்திரங்கள் முழங்க புனித நீரை ஊற்றி மஹா கும்பாபிஷேகம் செய்தனர்.
அதன் பின்னர் அம்மனுக்கு மஹர தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் புதுச்சேரி மாநில வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணன், சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரபிரியங்கா, ஆலய அறங்காவலர்கள், திருப்பணிக்குழு நிர்வாகிகள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.