தமிழ்நாடு

tamil nadu

தேச துரோக வழக்கு: அமுல்யா லியோனாவின் காவல் நீடிப்பு

பெங்களூரு: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு முழக்கம் எழுப்பிய அமுல்யா லியோனாவின் நீதிமன்ற காவல் வரும் மார்ச் 5ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

By

Published : Mar 1, 2020, 7:38 PM IST

Published : Mar 1, 2020, 7:38 PM IST

Amulya
Amulya

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பெங்களூரில் நடைபெற்ற போராட்டத்தில் அமுல்யா லியோனா பாகிஸ்தான் வாழ்க என்ற முழக்கம் எழுப்பி பெரும் சர்ச்சையில் மாட்டிக்கொண்டார். அசாதுதீன் ஓவைசி தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் இவ்வாறு முழக்கம் எழுப்பிய அமுல்யா லியோனா மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அமுல்யாவின் இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்த நிலையில், 124ஏ, 153ஏ ஆகிய இரு வழக்குகள் அவர் மீது பாய்ந்துள்ளது. 15 நாள்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ள அமுல்யாவின் காவல் வரும் மார்ச் 5ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமுல்யா நக்சல் இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், அவரது தந்தை தனது மகளின் செயல் தவறானது எனவும், இது போன்ற முழக்கம் கண்டனத்திற்குரியது எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:ஷாஹீன் பாக் பகுதியில் 144 தடை உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details