தெற்கு காஷ்மீரில் உள்ள புல்வாமாவின் பாம்பூர் பகுதியில் உள்ள மீஜில் பகுதியை பாதுகாப்புப்படையினர் சுற்றி வளைத்து, தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். இதையடுத்து, தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப்படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தத் தொடங்கினர். நேற்று(ஜூன் 18) நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார். ஆனால், இரண்டு பயங்கரவாதிகள் அருகிலுள்ள மசூதிக்குள் தஞ்சம் புகுந்தனர்.
இதையடுத்து, மசூதியைச் சுற்றி வளைத்த பாதுகாப்புப்படையினர் இன்று (ஜூன் 19) காலை, கண்ணீர் புகை குண்டுகளைப் பயன்படுத்தினர். அப்போது மசூதியிலிருந்து வெளியேறிய பயங்கரவாதிகளை வரவழைத்து சுட்டுக்கொலை செய்தனர்.