டெல்லி: நாட்டின் 74ஆவது சுதந்திர தினம் நாளை (ஆக.15) கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் எவ்வித அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளும் வகையில் காவலர்கள் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
டெல்லி மாநிலத்திலுள்ள தேசிய தலைநகர் பகுதிகள் முழுவதும் காவலர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. எல்லைகள் மற்றும் பதற்றத்துகுரிய பகுதிகளில் காவலர்கள் பன்னடுக்கு பாதுகாப்புகளை அமைத்துள்ளனர்.
டெல்லி செங்கோட்டையின் சுற்றிலும் உள்ள 5 கிலோ மீட்டர் பகுதிகளிலும் காவலர்கள் தீவிரமாக ரோந்து சுற்றிவருகின்றனர். 45 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என காவல் மூத்த அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
மேலும் கோவிட்-19 நெருக்கடி காரணமாக சில விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது என்றும் காவல் அலுவலர்கள் அனைவரும் கரோனா வைரஸ் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
நாளை சுதந்திரதினம்; டெல்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு! மேலும் வெடிகுண்டு அகற்றும் நிபுணர்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட மோப்ப நாய் குழுவினரும் பாதுகாப்பு பணியில் உள்ளனர் என்றார்.
கோவிட்-19 அறிகுறிகள் தென்பட்டால் சுதந்திர தின விழாவில் கலந்துகொள்ள வேண்டாம் என ஏற்கனவே டெல்லி காவல்துறை அறிவித்துள்ளது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க:'தமிழ்நாடு முதன்மை மாநிலமாக தொடர்ந்து திகழ பாடுபட வேண்டும்'- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுதந்திர தின வாழ்த்து!