நாட்டின் குடியரசு தினம் வருகிற 26ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசங்களை பொறுத்தமட்டில் குடியரசுத் தின கொண்டாட்ட நிகழ்ச்சிகள் ஷெர்-இ-காஷ்மீர் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. இதையடுத்து அப்பகுதி அருகே பல தடுப்புகள் அமைத்து காவலர்கள் சோதனை நடத்துகின்றனர். இதுதொடர்பாக போலீஸ் துணை இயக்குனர் (டிஜிபி) தில்பாக் சிங் கூறும்போது, “அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஸ்ரீநகரில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழா சீராக நடைபெறும்” என்றார்.