தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

எல்லை விவகாரம்: சீனாவின் வியூகம் குறித்து பாதுகாப்பு முகமை அறிக்கை - இந்தியா சீனா பதற்றம்

டெல்லி: எல்லைப் பகுதியில் சீனாவின் ஊடுருவல், அந்நாட்டின் அடுத்தக்கட்ட வியூகம் குறித்து மத்திய அரசுக்கு இந்திய பாதுகாப்பு முகமை அறிக்கை அனுப்பியுள்ளது.

மத்திய அரசிற்கு சீனா வியூகம் குறித்து பாதுகாப்பு முகமை அறிக்கை
மத்திய அரசிற்கு சீனா வியூகம் குறித்து பாதுகாப்பு முகமை அறிக்கை

By

Published : Jun 5, 2020, 5:43 PM IST

கிழக்கு லடாக் பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன், சீன ராணுவ வீரர்கள் பெருமளவில் குவிக்கப்பட்டனர். இதனால், இந்தியா - சீனா இடையே பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில், எல்லைப் பகுதியில் சீனாவின் ஊடுருவல், அந்நாட்டின் அடுத்தக்கட்ட வியூகம் குறித்து மத்திய அரசுக்கு இந்திய பாதுகாப்பு முகமை அறிக்கை அனுப்பியுள்ளது.

அதில், 'லடாக்கில் உள்ள முக்கிய இடங்களான தாலத் பெக் ஓல்டி, பாங்காங் சோ ஏரியில் சீனா அதன் படைகளை குவித்துள்ளது. மே மாதம் முதல் வாரத்தில் இருந்து 5 ஆயிரத்திற்கும் அதிகமான பாதுகப்பு படை வீரர்களை லடாக் எல்லையில் சீனா அனுப்பியுள்ளது. லடாக்கில் முதல்கட்ட தாக்குதலில், தனது படை எண்ணிக்கையின் மூலம் வியப்பில் ஆழ்த்திய சீனாவுக்கு, இந்தியா தக்க பதிலடி கொடுத்தது.

மேலும் திடீர் தாக்குதலை நடத்த சீனா முயன்றது. ஆனால் தகுந்த நேரத்தில் இந்தியா தனது படை வீரர்களை இறக்கியதால் அந்த திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது' என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்தியா - சீனா இடையே ஜூன் 6ஆம் தேதி நடக்க இருக்கும் பேச்சுவார்த்தையின் போது, எல்லைப் பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்தியா சமரசம் செய்யாது எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க:கர்ப்பிணி யானை கொல்லப்பட்டதைக் கண்டித்து ரத்தன் டாடா ட்வீட்

ABOUT THE AUTHOR

...view details