தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

செகந்திராபாத் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை - செகந்திராபாத் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

ஹைதராபாத்: செகந்திராபாத் ரயில் நிலையத்திற்கு நேற்று மாலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து ரயில்வே காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

bomb squad
bomb squad

By

Published : Feb 24, 2020, 1:21 PM IST

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையத்திற்கு நேற்று மாலை அடையாளம் தெரியாத நபர்களால் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பைத் தொடர்ந்து ரயில்வே காவல் துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இறுதியில் இது வதந்தி என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ரயில்வே காவல் ஆய்வாளர் ஆதி ரெட்டி கூறுகையில், "நேற்று இரவு 8.30 மணியளவில் எங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் அழைப்பு வந்தது. தற்போது ரயில் நிலையத்தில் தேடுதல் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது வரை வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. தொலைபேசியில் மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரித்து வருகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.

செகந்திரபாத் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்

மேலும், செகந்திராபாத் ரயில் நிலையம் ஹைதராபாத்தில் முக்கிய அங்கம் வகிக்கிறது. மிகவும் பரபரப்பான ரயில் நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:இந்தியா வந்தடைந்தார் ட்ரம்ப்; பாரம்பரிய நடனத்துடன் உற்சாக வரவேற்பு

ABOUT THE AUTHOR

...view details