டெல்லியில் ஆஷிஷ் நாண்டி மற்றும் பேராசிரியர் ஆகாஷ் ராத்தோர் தொகுத்த "ஒரு தேசத்திற்கான பார்வை, வழி மற்றும் பார்வைகள்” என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் குடியரசு முன்னாள் துணைத் தலைவர் ஹமித் அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோர் கலந்துகொண்டர்.
அப்போது விழாவில் பேசிய ப. சிதம்பரம், “இந்த புத்தகம் ஒன்று சாதாரணமான புத்தகம் அல்ல. இதை அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டும். இந்த புத்தகத்தில் பல அடிப்படைகளின் அவசியங்கள் பற்றி அறிந்து கொள்வீர்கள்” என்றார்.